காதலில் சொதப்புவது எப்படி படம் பாத்ததுல இருந்து நம்மளும் சில கற்பனை அனுபவங்களை எழுதலாம்னு ஆசை, சில உண்மைகள் இருந்தாலும் இது கற்பனை பதிவு தான் :)
பொண்ணு : நான் உன்னை ரொம்ப கஷ்டபடுதுறேன்ல? உண்மைய சொல்லு ( ஒரு சோகம் கலந்த சிணுங்கலோடு )
பையன் மனசாட்சி: ஆமானு சொல்லிட்டா உடனே நிறுத்திட போறியா?
பையன் : ஏய் ஏன் எப்படி பேசுற? அப்படில்லாம் ஏதும் இல்ல
( இப்ப மட்டும் ஆமானு இந்த பையன் சொல்லிருந்தன்னு வைச்சுக்கோங்க அவளோ தான் நான் உன்னைய என்ன கஷ்டபடுதுநேன்னு துவங்கி அது ஒரு வாரத்துக்கு போகும் )
இந்த பொண்ணுங்க சந்தோசமா இருக்குறதுக்கும் சோகமா இருக்குறதுக்கும் காட்ர வித்தியாசம் இருக்கே அடடடா
ஒரு பொண்ணு சந்தோசமா இருக்கும் போது
பொண்ணு: இன்னைக்கு பக்கத்து வீட்டு அக்கா அவங்க குழந்தை தூக்கிட்டு வந்துருந்தாங்க, அவளோ அழகா குட்டியா cutea இருந்துச்சு
பையன் mind voice: எங்க வீட்லலாம் குழந்தை ரொம்ப பெருசா இருக்கும்.
ஆனா பையன் சொல்லுரது
பையன்: ஓ அப்படியா? ( புன்னகையுடன் )
பொண்ணு: ஆமா, நான் ஒரு நாள் போட்டோ கொண்டுவரேன். ஆனா ஏன்னே தெரில எங்கிட்ட வரும் போது அழுதுட்டே இருந்துச்சு
பையன் mind voice: எனக்கே நீ போடுர மொக்கைல அழுகை வருது, குழந்தைக்கு வராதா?
பையன்: சரி சரி போட்டோ கொண்டு வா பார்க்கலாம்.
அதே பொண்ணு கோபமா இருக்கும் போது phone பேசுறா
பையன்: ஹய்..
பொண்ணு: ஹ்ம் சொல்லு
பையன்: சாப்டியா?
பொண்ணு: ஹ்ம் bye
பையன்: என்ன சாப்ட?
பொண்ணு: தோசை bye
பையன்: அப்புறம்?
பொண்ணு: ஒன்னும் இல்ல bye நான் அப்புறம் பேசுரேன்.
இந்த நேரத்துல பையன் ஏன் bye சொல்லுரனு கேட்டுட்டான்னு வைச்சுக்கோங்க அவன் கதை அவளோ தான், அவன் செத்தான் :)
உலகத்துல இருக்குற எல்லா பொண்ணுங்களும் ஒரே ஒரு கருத்து மட்டும் ஒற்றுமையா ஒரே கருத்தா இருக்கு அது என்னன்னா " உலகத்துல இருக்குற எல்லா பசங்களும் கெட்டவங்க " ( இதுல அவங்களுக்கு புடிச்ச heroku மட்டும் விதி விலக்கு, அவர் மட்டும் நல்லவர் )
இது ஒரு ஜாலியான பதிவு,யாரும் கோவப்பட்டா கம்பெனி பொறுப்பல்ல....
